தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை: சந்திரசேன காட்டம்
நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள் தான் உள்ளனர். தேர்தலைப் பிற்போட அரசு முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. காரணத்தின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.
எதிரணிகளின் அரசியல் நாடகம்
அடுத்த தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர்.
எதிரணிகளின் அரசியல் நாடகம் மக்களுக்குத் தெளிவாக புரியும். கிராம மட்டத்தில் தற்போது கூட்டங்களை நடத்தி வருகின்றோம்.
எமது பலம் என்னவென்பதை ஜே.வி.பியினர் அங்கு வந்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.