;
Athirady Tamil News

சர்வதேச தரத்திலான பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பினை இலங்கையில் மேற்கொள்வது தொடர்பில் வெளியான அறிவித்தல்

0

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அதிபர் மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காகவும், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த மே மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கலான அறிக்கையின் அடிப்படையில், சர்வதேச தரப்படுத்தலுக்கமைய இலக்கம் 01 தொடக்கம் 1000 வரையான பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டங்களை எமது நாட்டில் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.