விற்பனையில் காலாவதி திகதிகள் இல்லாத அழகுசாதனப் பொருட்கள்
கொழும்பு – பத்தரமுல்லையிலுள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் விலை, காலாவதி திகதிகள் காட்சிப்படுத்தப்படாத அழகுசாதனப் பொருட்கள் நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கடையின் விற்பனையாளர் தோல் வெண்மைக்கும் அழகுசாதனப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படும் லோஷன்களில் பொருளின் விலை, உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள் காட்சிப்படுத்தப்படாமல் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில், நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் நடவடிக்கையின் கீழ் கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு உரிய தகவல் இன்றி பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.