யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்
யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கீழே விழுந்து உயிரிழப்பு
அந் நபர் கடந்த 6ஆம் திகதி தென்னை சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் கீழே விழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.