;
Athirady Tamil News

‘அம்மாவ வாங்க முடியுமா’ – முதியோர் இல்லத்தில் கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர்!

0

முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதியவர்கள் ஆடிய நடனத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர்.

முதியோர் தினவிழா
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 வயதை கடந்த ஆதரவற்ற முதியவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி அங்குள்ள ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சியர் ‘அருணா ஐஏஎஸ்’ கலந்து கொண்டார். அவர் 100 வயதை கடந்த முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து, தேவையான அத்தியாவசிய மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.

மாவட்ட ஆட்சியர் கண்ணீர்
அப்போது பெற்றோர்களால் கைவிடப்பட்ட அங்குள்ள முதியோர்கள் வியாபாரி படத்திலுள்ள “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்” என்ற பாடலுக்கு குழு நடனம் ஆடினார்.

இதனை பார்த்து மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு அழுதார். மேலும் அங்கிருந்தவர்களையும் இது கண்ணீர் சிந்த வைத்தது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.