நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவையில் தாமதம்
தமிழகம் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையின் ஆரம்பத் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் 10ஆம் திகதியன்று கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது, எனினும் தவிர்க்க முடியாத தொழிநுட்ப காரணங்களால் அக்டோபர் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
இதனையடுத்து ஏற்கனவே காங்கேசன் துறைமுகம் செல்ல அனுமதிச்சீட்டுக்களை முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணங்கள் திரும்ப செலுத்தப்பட்டன.
பயணிகள் கப்பல் சேவை
இந்தநிலையில் தற்போது இரண்டாவது முறையாக கப்பல் சேவையின் ஆரம்ப திகதி மாற்றப்பட்டு அக்டோபர் 14ம் திகதி சேவை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து, ஆயுஸ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநாடு ஒன்றின் நிமித்தம் தற்போது இலங்கையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.