இலங்கையுடனான ஒப்பந்தங்கள் குறித்து நிலையற்ற தன்மையில் IMF

கடனளிப்பவர்களுடன் இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன எனினும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றி தெரியவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடன் இலக்குகளுடன் நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கு ஒப்பந்தங்களின் முழு தொகுப்பையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் பூர்வாங்க உடன்படிக்கை
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமது கடன்களை அகற்றுவது தொடர்பாக இலங்கையுடன் பூர்வாங்க உடன்படிக்கையை எட்டியதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது, எனினும் மேலதிக விபரங்களை அந்த அமைச்சு பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.