;
Athirady Tamil News

யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சி: அனுமதி இலவசம்

0

தென்னிலங்கை பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான “HARIHARAN LIVE CONCERT & STAR NIGHT” நிகழ்ச்சி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

பிரதான நிதி அனுசரணை

NORTHERNUNI ஏற்பாட்டில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் பிரதான நிதி அனுசரணையாக MAGICK HOME உம் இணை நிதி அனுசரணையாளர்களாக MAGICK WOODS, MAGICK TECH, MAGICK REALTY உம் இணையவுள்ளனர்.

யுத்த கால சூழல் மற்றும் கொரோனா தாக்கங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய வடக்கு கிழக்கு மக்களின் மத்தியில் அவர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.