கொந்தளிப்பு; அமெரிக்கா செஞ்ச இந்த தப்புதான் போருக்கே காரணம் – இஸ்ரேலுக்கு எதிராக குதித்த ரஷ்யா!
அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் போருக்கு காரணம் என ரஷ்யா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அழுத்தம்
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. தற்போது இந்த போர் சர்வதேச அளவில் உருவெடுத்துள்ளது.
தொடர்ந்து இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை இங்கே அனுப்பி உள்ளது . இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது.
கொந்தளித்த ரஷ்யா
தற்போது ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது. இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளை இவர்கள் பார்க்கவில்லை.
அவர்களின் கஷ்டங்களை பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேல் மதிக்கவில்லை.
அமெரிக்காவும் மதிக்கவில்லை. தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். ஆனால் அமெரிக்கா அதை பற்றி நினைப்பது இல்லை. பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள் , பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்காமல் போய்விட்டது என காட்டம் தெரிவித்துள்ளார்.