பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!!
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெச்.ராஜா
தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும் தற்போதும் தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஹெச்.ராஜா.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், தற்போதும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு பரபரப்பாகி இருந்து வருகின்றார்.
தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக ட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.H. ராஜா அவர்கள் https://t.co/rFgmE6zLQc.,B.L.,FCA.,Ex.MLA., உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்.
– Team HR
— H Raja (@HRajaBJP) October 11, 2023
இது குறித்து வெளியிடப்பட்ட பதிவில், உடல்நல கோளாறின் காரணமாக அவர் சில நாட்கள் அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.