கொழும்பில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள மரங்கள்!
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 300இற்கும் மேற்பட்ட மரங்கள் மக்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தலாக உள்ள மரங்களை உடனடியாக அகற்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.