கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து… வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஹமாஸ் ஆயுதக்குழுவின் அட்டூழியங்கள்
சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அராஜகச் செயல்கள் குறித்த அதிரவைக்கும் செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
அவை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு, இளகிய மனம் கொண்டோர் காதுகளால் கேட்க இயலாத அளவுக்கு பயங்கரமாக உள்ளன.
மீட்புப் பணிக்காக சென்ற இஸ்ரேல் ராணுவத்தினர், தாங்கள் கண்ட காட்சிகளால் நிலைகுலைந்துபோன தங்கள் நாட்டவர்களை, அணைத்து ஆறுதல் சொல்லும் காட்சிகள் அதற்கு சாட்சியமாக அமைந்துள்ளன.
கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து…
இஸ்ரேல் ராணுவத்தினர், தங்கள் கிராமங்களுக்குள் வீடு வீடாக நுழைந்து அங்குள்ளவர்களை மீட்கச் சென்றுள்ளனர், அப்போது, இஸ்ரேல் தளபதி ஒருவர் தான் கண்ட ஒரு காட்சியை விவரிக்கும்போது, கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
ஒரு வீட்டுக்குள் கர்ப்பிணிப்பெண் ஒருவர் கிடப்பதைக் கண்டு அவரைப் புரட்டியிருக்கிறார்கள் ராணுவத்தினர். அப்போது அவர்கள் கண்ட காட்சி, கல் மனதையும் கலங்க வைக்கும் வகையில் அமைந்திருந்திருக்கிறது.
ஆம், அந்த கர்ப்பிணியின் வயிறு கிழிக்கப்பட்டிருக்க, தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டிருந்த அவரது குழந்தையை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள் ஹமாஸ் குழுவினர். அந்த தாய் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
குழந்தைகளைக் கட்டிவைத்து எரிக்கும்போதே சாப்பிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்
பல குழந்தைகள், குடும்பத்துடன், கைகள் பின்னால் கட்டப்பட்டு, உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை கைகளை பின்பக்கமாக கட்டி வைத்து, உயிருடன் கொளுத்திவிட்டு, அவர்கள் துடிக்கத் துடிக்க சாகும்போது, அதைப் பார்த்துக்கொண்டே, உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
இப்படி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலில் செய்த கொடூரச் செயல்கள் செய்திகளாக வெளியாகி, உலகை அதிரவைத்தவண்ணம் உள்ளன.