அரச வைத்திய அதிகாரிகளுடன் அதிபர் திடீர் சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறை மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பிலும், சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனைகள்
இதன்போது, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 8 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.