இஸ்ரேலில் சிக்கிய 235 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு! வந்தடைந்தது 2 -வது விமானம்
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்க தொடங்கிய திட்டம் மூலம், இரண்டாவது விமானத்தில் வந்த 235 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
ஆபரேஷன் அஜய்
கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பிணைக் கைதிகளாக பிடிபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
7 -வது நாளான நேற்றுவரை, இந்த போரினால் ஏற்பட்ட உயர்சேதம் 3000 -யை தாண்டியது. இதனால், அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் மீட்பு
அதன்படி, இந்த திட்டத்தின் முதற்கட்டமாக நேற்று காலை டெல்லிக்கு முதல் விமானம் வந்தது. இந்த விமானத்தின் மூலம் தாயகம் திருப்பிய 212 பேரை இந்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கிய 235 இந்தியர்களுடன் இந்தியா கிளம்பிய 2 -வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.