;
Athirady Tamil News

யாழில் குத்தகைக்கு விடப்படும் அதிபர் மாளிகை

0

யாழ் அதிபர் மாளிகையின் வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள இந்த மாளிகை 29 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, அதில் 12 ஏக்கர் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன.

வருமானத்தின் அடிப்படையில்
எஞ்சிய நிலம் அப்பகுதி மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு, அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை SLIITக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.

8I918

மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை வருமானத்தின் அடிப்படையில் SLIIT நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

தற்போது, ​​இந்தக் காணி கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர், குறித்த வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு விடுவிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.