வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அதிபர் ரணிலிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
சாகர காரியவசம் பல தடவைகள் கோரிக்கை
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த காலங்களில் ஊடகங்கள் முன் விரக்தியை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் கவனம்
எனினும், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் என்பதால், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.