களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த கதி
களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானை ஒன்று சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ் யானையானது சுமார் 70 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை பராமரிப்பாளர்கள் குழுவினர்களால் களனி கங்கையில் நீராடுவதற்காக மாப்பிட்டிகிராமத்தின் பாலத்தின் ஊடாக களனி கங்கைக்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
யானை நீராடி முடித்து சென்ற போது எதிர்பாராத விதத்தில் யானை பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை வைத்திய அதிகாரிகள் பாரந்தூக்கியின் உதவியுடன் யானையை மீட்டு லொறி ஒன்றில் ஏற்றி மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.