தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 48.2 வீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 65 ஆயிரத்து 479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது