புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவாக அடைவதற்காக நிதி அமைச்சில் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்
புதிய வரி
“இந்த விவாதங்களை சரியான இடத்திற்கு கொண்டு வருவோம். தெளிவாக, வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும். வருவாய் இலக்குகளை எட்ட வேண்டும்.
புதிய வரிகளை இந்த நாட்டு மக்கள் மீது சுமத்த முடியாது. இது அரசியல் பிரச்சினை அல்ல. தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
அதன்பின் தற்போதுள்ள அமைப்பிற்குள் அடிப்படையை விரிவுபடுத்தி, வருமான வரி செலுத்தாதவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.