சுமார் 300,000 உக்ரைனிய தானியங்கள்: ஒட்டுமொத்தமாக அழித்த ரஷ்யா
சுமார் 300,000 லட்சம் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்து இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
நீடிக்கும் உக்ரைன் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா தனது தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
இதனால் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தானிய ஏற்றுமதி தடைப்பட்டது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில் ரஷ்யாவின் தடையை மீறி உக்ரைன் கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை சமீபத்திய உக்ரைன் தொடங்கியது.
தானியங்கள் மீது ரஷ்யா தாக்குதல்
இந்நிலையில், ஜூலை முதல் சுமார் 300,000 லட்சம் டன் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்து இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
Russia has destroyed 300,000 tons of Ukrainian grain since July
After withdrawing from the grain agreement, the terrorist country has carried out 17 massive attacks, destroying 300,000 tons of grain, Ukrainian Deputy Prime Minister for Restoration Oleksandr Kubrakov has said.… pic.twitter.com/2xyHG8GSO4
— NEXTA (@nexta_tv) October 14, 2023
மேலும் ரஷ்யா தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இதுவரை 17 மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது என்றும், மொத்தம் 300,000 லட்சம் டன் தானியங்களை ரஷ்யா அழித்து இருப்பதாக உக்ரைனின் மறுசீரமைப்பு துணை பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் 25 தானிய கப்பல்கள் உக்ரைன் உருவாக்கிய தற்காலிக கருங்கடல் வழிப்பாதைக்குள் நுழைந்துள்ளது, அவற்றில் 21 கப்பல்கள் ஏற்றுமதிக்காக காத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.