;
Athirady Tamil News

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது

0

கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் (03.10.2023) ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர்கள் நேற்று(14.10.2023) இரவு நாகொட லிப்டன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அவசர இலக்கமான 118க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய உறவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை
தாக்குதல் நடத்திய கணவனும் மனைவியும் அணியகந்த பிரதேசத்தில் இணையம் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான பெண் சுமார் 3 வருடங்களாக இந்த உறவினர் வீட்டில் தங்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் தக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் என்ற காரணத்தினால் தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.