;
Athirady Tamil News

மயிலத்தமடு விவகாரம்: அதிகாரிகளுக்கு ரணில் விடுத்த பணிப்புரை!

0

மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று(15) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அதிபரின் செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மகாவலி பணிப்பாளர் , காவல்துறைமா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டின் முதுகெலும்பு
விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும். இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு மயிலத்தமடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களிலேயே விவசாயம் மேற்கொள்ள மாற்று இடஒதுக்கீடுகள் வழங்க அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இருத்தரபினருடைய பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என அதிபர் தெரிவித்தார்.

மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவி தொகைகளை வழங்குமாறும் அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.