கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட தடை
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்தை அந்தப் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியிலும் வார இறுதி நாட்களிலும் பணம் வசூலித்து கற்பிப்பதை முற்றாக தடை செய்து மாகாண கல்வி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை மீறும் ஆசிரியர்களை கண்காணிக்க பிராந்தியவலயக் கலவிப்பணிப்பாளர்கள், அதிபர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை மேற்பார்வையாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அதிகாரம் வழங்கியுள்ளது.
பெற்றோர் முறைப்பாடு
இந்த உத்தரவுகளை மீறும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோர்கள், கல்வி அமைச்சின் உள்ளக கணக்கு தணிக்கை பிரிவு அல்லது 24 மணி நேர ஆளுநரின் பொது புகார் பணியகத்தை 0267500500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.கிதாஞ்சன திஸாநாயக்க, ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடத்தை அந்த வகுப்பின் மாணவர்களுக்கு மட்டுமன்றி பொதுத் தரங்களுக்கும் பணத்திற்காக கற்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.