கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி: பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.
கழிவறையில் விபத்து
இடைவேளையின் போது, மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, கட்டடத்தின் நுனியில் கால் இடறி விழுந்தமையால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக வந்த உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, மாணவனை தனக்கு சொந்தமான காரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
பரீட்சை எழுதும் மாணவன் என்பதனால் உடனடியாக சிசிக்சையளிக்குமாறு அதிகாரி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பொலிஸாரின் செயல்
அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாவணருக்கு சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சையின் பின்னர் மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த நிலையில் மாணவனுக்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டு பரீட்சை எழுத சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மாணவனுக்கு உதவி பொலிஸ் அதிகாரிக்கு அங்கிருந்த அனைவரும் நன்றி செலுத்தியுள்ளனர்.