அனைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரையும் கொன்றுவிட்டோம்: இந்தியா இலங்கைக்கான இஸ்ரேல் தூதர்
இஸ்ரேலின் தெற்கு பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அனைவரையும் அழித்துவிட்டதாக இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரையும் கொன்றுவிட்டோம்
இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் துணை தூதரக அதிகாரியான Ohad Nakash Kaynar, தெற்கு இஸ்ரேலில் இருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அனைவரையும் இஸ்ரேல் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல் கொடூரமானது என்று கூறிய அவர், இன்று தங்கள் கிராமம் ஒன்றில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த நூறு பேருக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவதாக தெரிவித்தார்.
மனித உரிமைகள் மீறல் குறித்து கேள்வி
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் கொடுக்கும் பதிலடியின்போது, மனித உரிமைகள் மீறப்படாதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Kaynar, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதே, அப்போது 40 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டார்களே, அப்போது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா என பதில் கேள்வி எழுப்பினார்.
ஆனாலும், நாங்கள் மனித உரிமைகள் குறித்து அக்கறை செலுத்துகிறோம் என்று கூறிய Kaynar, நாங்கள் தாக்குதல் தொடுக்கும் முன், எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில், வானத்தை நோக்கி சுடுவது, சில கட்டிடங்களுக்கு அங்கு தாக்குதல் நடக்கப்போகிறது என சமிக்ஞை கொடுப்பது என ஏதாவது ஒரு வகையில் பொதுமக்களை எச்சரித்துவிட்டுத்தான் தாக்குதல் நடத்துகிறோம் என்றார்.
அத்துடன், காசாவிலிருக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் ஏற்கனவே எச்சரித்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், காசாவில் தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவிட்டதாகவும், அதெநேரத்தில், காசாவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு களமிறங்கலாம் என்றும், செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.