டிஆா் காங்கோ படகு விபத்தில் 40 போ் பலி: 167 போ் மாயம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) ஏற்பட்ட படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 167 போ் மாயமாகினா்.
அந்த நாட்டின் காங்கோ ஆற்றில் 300-க்கும் மேற்பட்டவா்களுடன் சென்று கொண்டிருந்த அந்தப் படகு, நடுவழியில் கவிழ்ந்தது.
அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் சென்றால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துப் பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன; சுமாா் 189 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
இது தவிர, படகில் இருந்த சுமாா் 167 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
டிஆா் காங்கோவில் போதிய சாலை வசதிகள் இல்லாததால் அங்கு நீா்வழிப் போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை அழைத்துச் செல்வது, போதிய பரமாமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் அங்கு அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுகின்றன.