;
Athirady Tamil News

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் – காசாவில் தவிக்கும் மக்கள்!

0

காசாவில் மயானத்தில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில்,

பலி எண்ணிக்கை
அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மட்டுமே நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவை இருப்பு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே இன்று 11-வது நாளாக போர் நீடித்து வருகிறது.

வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அங்குள்ள மயானங்களில் இடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஸாவில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. மேலும், உடல்களை சேமிக்க ஐஸ்கிரீம் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.