பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்; மூன்று மாணவர்கள் படுகாயம்
கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில் மற்றையவர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 6 இல் பயிலும் 11 வயதான மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தில் அம் மூன்று மாணவர்களும் வெளியே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற வெடி விபத்து
அப்போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது. அதனை ஒருவர் உதைத்தைப்போதே அது திடீரென வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதைத்த மாணவனின் பாதணி சேதமடைந்துள்ளதால் அந்தக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வெடி பொருள் ஒன்றே வெடித்து சிதறியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறியுள்ளார்.
இச்சம்பவம் 01:35 மணியளவில் பாடசாலையினால் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம் அவ் இடத்திற்கு சென்ற போது பாடசாலையில் கரும்புகை சூழ்ந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டபோது வெடி விபத்து குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என பொலிஸார் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.