கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.