ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன்
வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின் படி அந்நாட்டு ராணுவ தளபதி பிரானா மீன் தொட்டியில் வீசிக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் ஒரு சர்வாதிகாரியாக காணப்படுவதோடு வடகொரியா முற்றிலும் மர்மம் நிறைந்த நாடாகவே உள்ளது.
நாட்டு மக்கள் சர்வாதிகார ஆட்சியில் கீழ் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றனர்.
விசித்திரமான தண்டனை
மேலும் அங்கு தவறுகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் விதம் சற்று வித்தியாசமாகவும் கொடூரமாகவுமே காணப்படும்.
இந்நிலையில் தற்போது அந்நாட்டு ராணுவ தளபதியை கொலை செய்த இந்த விதம் பரபரப்பை உண்டாகியுள்ளது.
வடகொரியாவில் கிம்மிற்கு எதிராக பேசவே முடியாத நிலையில்,அவருக்கு எதிராக சதி செய்வது என்பது நினைக்கவே முடியாத காரியம்.அவ்வாறு சதி செய்பவர்களுக்கு விசித்திரமான தண்டனைகளே கிடைக்கும்.
ராட்சத மீன் தொட்டி
அந்தவகையில் கொல்வதற்காகவே பிரத்தியேகமாக ராட்சத மீன் தொட்டி ஒன்று ரியாங்சாங்கில் உள்ள கிம் இல்லத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ராணுவ தளபதி வடகொரியா அதிபருக்கு எதிராக சதி செய்து வடகொரியாவை கைப்பற்ற முயற்சி செய்ததற்காகவே கொல்லப்பட்டுள்ளார். ராணுவ தளபதியை மீன் தொட்டியில் வீசுவதற்க்கு முன்னர் அவரின் கை கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகின்றது .
கிம் சமீபத்தில்,1977ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற படத்தை பார்த்ததாகவும் அதன் பிறகே அந்தப் படத்தில் வருவதைப் போல இப்படி பிரானாவை வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிம்மின் தந்திரோபாயம்
இதற்காகவே பிரேசிலில் இருந்து பிரானாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்வது முதன் முறையல்ல எனவும் ராணுவ தளபதியுடன் சேர்த்து 16 பேரை இவ்வாறு கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம்மின் மனநிலை குறித்து ஏதும் கூற முடியாத நிலையில் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த முடிவையும் எடுப்பதோடு இவ்வாறு கொலை செய்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதே கிம்மின் தந்திரோபாயம் என பிரிட்டன் உளவுத் துறை தெரிவித்துள்ளது .