இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்… அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000 கோடி
Havells India நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களில் ஒருவரான வினோத் ராய் குப்தா என்பவரே இந்தியாவின் பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர்.
16 புதிய கோடீஸ்வரர்கள்
77 வயதான வினோத் ராய் குப்தா, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான 16 புதிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 5 பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் Savitri Jindal, Rohiqa Cyrus Mistry, Rekha Jhunjhunwala, Vinod Rai Gupta, மற்றும் Leena Tewari ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Havells India நிறுவனத்தில் வினோத் ராய் குப்தா மற்றும் இவரது மகன் அனில் ராய் குப்தா ஆகியோருக்கு இருக்கும் பங்குகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கோஈஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கோடீஸ்வர பெண்களில் 4வது
77 வயதான வினோத் ராய் குப்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 55,000 கோடிக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது. இதனால் அவர் இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் 4வது இடத்தில் உள்ளார்.
Havells India நிறுவனமானது 1958ல் கிமத் ராய் குப்தா என்பவரால் துவங்கப்பட்டது. இவரது மனைவியே வினோத் ராய் குப்தா. இவர்களின் மகன் அனில் ராய் குப்தா தற்போது Havells India நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
மின் பொருட்கள் வர்த்தக நிறுவனமா நிறுவப்பட்ட Havells India நிறுவனத்திற்கு சொந்தமாக 14 தொழிற்சாலைகள் உள்ளன. இவர்களின் தயாரிப்புகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.