சட்ட நடவடிக்கைக்கு தயார் : விவசாய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை வெவ்வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பிரதேச விவசாய அமைப்புகள் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடிப்படையாகக்கொண்டே விவசாய அமைச்சர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.
சந்தையில் விற்பனை செய்யப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயர்களில் 75 சதவீத களைகொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளில் இரசாயனப் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை
ஆனால், சில பிரதேசங்களில் விற்பனை செய்யப்படுகிற பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதே தரம் பின்பற்றப்படுவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முறையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று விவசாய அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து அமைச்சர் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை விலையை ஒழுங்குபடுத்த ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற மோசடிகளை இனம்கண்டால் விவசாயத்துறை, விவசாய அமைச்சு மற்றும் பூச்சிக்கொல்லி பதிவாளர் போன்ற அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தும் படியும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
உரிய முறைப்பாடுகளினை அடிப்படையாகக் கொண்டு குறித்த மோசடி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரியப்படுத்தினார்.