யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது நாடாளுமன்றின் அந்தஸ்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், ஏப்ரல் 06ஆம் திகதி கோப் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
SLIT நிறுவனத்தை சூறையாடிய குழுக்கள்
அரசாங்க நிதியை கொண்டு 500 மில்லியன் செலவில் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்ட SLIT நிறுவனத்தை தற்போது சில குழுக்கள் சூறையாடியுள்ளன.
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாண அதிபர் மாளிகையை அந்த குழுவிற்கு மாற்றியமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உடன்படிக்கை கைச்சாத்து
யாழ்ப்பாணத்தில் உள்ள அதிபர் மாளிகை SLIT நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.