இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : ஐ.நாவிடம் சஜித் கோரிக்கை
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக போரை நிறுத்துங்கள்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தற்போது நடந்து வரும் போரில் ஆயிரத்து 400 இஸ்ரேலியர்களும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட இப்படியான அனைத்து சம்பவங்களும் படுகொலையாகும்.
இந்தப் போர் சூழ்நிலையை சமரசப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையிலான கூட்டத்தை உடன் கூட்டி, அத்தரப்புகளின் தலையீட்டுடன் இந்த பயங்கரவாதத்தையும், அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் கோருகின்றேன் என்றார்.