யாழ். முகமாலையில் விசமிகளால் வீடு சொத்துக்கள் நாசம்
யாழ்ப்பாணம் – முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு (17.10.2023) இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வன்முறை சம்பவம்
கடந்த 45 நாட்களுக்கு முன்னர் வன்முறை சம்பவம் ஒன்ற இடம் பெற்றிருந்தது.
அதில் ஒருவர் மரணம் அடைந்திருந்ததாகவும், அவரது 45 ஆம் நாள் நினைவு நேற்றைய தினம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த வன்முறைச்ச சம்பவங்களுடன் தொடர்புடைய வீடு மீதே நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதே வேளை கடந்த 45 நாட்களுக்கு முன்நநர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.