காசா மருத்துவமனை தாக்குதல்: பைடனின் அதிரடி நடவடிக்கைகள்
காசா மக்களுக்காக மற்றும் மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பானது, அமெரிக்க அதிபரின் எக்ஸ்(டுவிட்டர்) வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காசா மருத்துவமனை ஒன்றிற்கு தாக்குதல் நடத்தப்பட்டு அதில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மனிதாபிமான உதவி
இந்நிலையில், பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நான் காசா மற்றும் மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர் உதவியை அறிவித்தேன். இந்த பணம் 1 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மற்றும் மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவி தேவைப்படுபவர்களை சென்றடையும் வகையில் எங்களின் வழிமுறைகள் இருக்கும். இந்த உதவி ஹமாஸ் அல்லது வேறு இயக்கங்களுக்கானது அல்ல” என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் இஸ்ரேலுடன், இன்றும், நாளையும் மற்றும் எப்போதும் அமெரிக்கா துணையாக நிற்கும். அதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம் என பைடன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
I just announced $100 million for humanitarian assistance in Gaza and the West Bank.
This money will support over 1 million displaced and conflict-affected Palestinians.
And we will have mechanisms in place so this aid reaches those in need – not Hamas or terrorist groups.
— President Biden (@POTUS) October 18, 2023