பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் உத்தரவு!
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் குழாம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே முடித்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரினி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.