பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தலையிடுவேன்: துருக்கிய அதிபர் எச்சரிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரமானது இன்று உலகையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் பேசுப்பொருளாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச தரப்பில் பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்காகவும், பாலஸ்தீனத்திற்காகவும் முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், துருக்கி அதிபர் டயிப் எர்டோகன் முக்கியமான அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.
பாலஸ்தீன இனப்படுகொலை
பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தலையிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்துரைக்கையில்,
“காசா பள்ளத்தாக்கில் இடம்பெறும் முன்னர் ஒருபோதும் இல்லாத இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவருமாறு மனித குலத்தை கேட்டுக்கொள்கின்றேன். இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம்” என்றார்.