;
Athirady Tamil News

இலங்கையில் தரையிறங்கிய இந்திய கடற்படையின் அதி நவீன உலங்கு வானூர்தி

0

இலங்கை விமானப்படையினரின் துணை விமானிகள் பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக உலங்கு வானூர்தி இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த உலங்கு வானூர்தியானது நேற்று(19.10.2023) கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் தரயிரங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அயலுறவு கொள்கை
இலங்கை விமானப்படை விமானிகள், நடைபெறவுள்ள பயிற்சிகளின் மூலமாக அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர்களை கையாளும் வாய்ப்புகளுடன் துணை விமானி அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியுமென கூறப்படுகிறது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் இந்த பயிற்சி அணியினர் திட்டமிட்டுள்ளதோடு, அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அயல்நாடுகளின் திறன்விருத்தி செயற்பாட்டுத்திட்டத்தின் ஓரங்கமாக இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினருக்கான கப்பலில் விமானங்களை தரையிறக்குதல் மற்றும் இலங்கை விமானப் படையினருக்கான துணை விமானி அனுபவங்கள் ஆகிய பயிற்சிகளை வழங்குவதற்காக 2022 மார்ச் முதல் இலங்கையில் அதிநவீன இலகு ரக உலங்கு வானூர்திகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.