நெருக்கடி நிலையை சந்தித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை
நாட்டை விட்டு 372 தாதியர்கள் வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாதியர் பற்றாக்குறை
இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்துள்ளதுடன் தற்போது தேசிய வைத்தியசாலையில் சுமார் 2400 தாதி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கைக்கு ஒரு தாதி இருக்க வேண்டும் என்பது பொதுவான வடிவமைப்பாக இருந்தாலும், தற்போது இரண்டு படுக்கைகளுக்கு ஒரு தாதி மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தேசிய வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதால் வைத்தியசாலையிலுல்ல திணைக்களங்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கூறப்படுகிறது.