இதை செய்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும்: அண்ணாமலை கொடுத்த ஐடியா
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினால் ஜாமின் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மது விற்பனை
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அங்கு, 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் மதுவால் 4 பேர் படுகொலை செய்யப்பட்டது தான் சமூக விரோத செயல்பாடுகளுக்கு சாட்சியாகும். மது குடித்ததால் 4 பேர் குடும்பங்களின் நிம்மதியும் தொலைந்துள்ளது.
சமூக விரோதிகளையும், குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும் காவல்துறை தண்டிக்க மறைந்துள்ளது. இங்கு, உளவுத்துறை இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. மது விற்பனையின் மூலம் இளைஞர்கள் கொலைகாரர்களாக மாறியுள்ளனர்” என்று கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்
மேலும் பேசிய அண்ணாமலை, “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் தான் அவருக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு ஜாமின் கிடைக்கும். தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.