தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தத்திற்கு நாடாளுமன்றம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணும் நோக்கில் இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த போரின் அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை நாடாளுமன்றம் கோரிக்கை விடுப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.
உலக யுத்தம்
அத்தோடு, மனிதாபிமான சட்டத்தை மீறி யுத்த மோதல்கள் அதிகரித்து வருவதாலும், இருதரப்புக்கும் ஆதரவளிக்க பல்வேறு நாடுகளும் முன்வருவதால் உலக யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், இந்த யுத்த மோதலினால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பதுளை மாவட்ட சபை உறுப்பினர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.