40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : ஒருவர் பலி பலர் படுகாயம்
பதுளை மொரஹெல பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது உல்பத சந்தி என்ற பிரதேசத்தில் இன்று(20) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று வார சந்தை நடைபெறவுள்ளதால் பெருமளவான மக்கள் பேருந்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.