சுற்றுலாத் துறை வருமானத்தில் ஏற்றம் கண்டுள்ள இலங்கை
இலங்கையில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.