இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை
இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின் காசா நகரம் அமைந்துள்ளது.
காசா நகரில் தான் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் காரணத்தால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது இடைவிடாத தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதில் இதுவரை 2278 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 9,700 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேரளா நிறுவனம் மறுப்பு
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்சாலையில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் என்ற நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடைகளை தைத்து வந்தது.
பாலஸ்தீனத்துடனான இஸ்ரேல் போரை தொடர்ந்து மரியன் அப்பாரல்ஸ் நிறுவனம் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் 1 லட்சம் சீருடைக்கான ஆர்டர்ரையும் மரியன் அப்பாரல்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.