பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் : பிள்ளையான்
எமது நாட்டில் IMF கதைகள் தற்போது பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதை எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவது என்பது தொடர்பாக பேசுகின்றார்கள். மக்களும் மிகவும் துன்பப்பட்டு வீதிக்கு இறங்குகின்ற நிலைமைகள் காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் கூறியது போன்று கடந்த காலங்களில் முதல் முதலாக வந்த வாகனங்களுக்கு “ஸ்ரீ” எழுத்து பாவிக்கப்பட்டது போல் தான் தற்போது இந்த பிரச்சனை உருவாகி இருக்கின்றது.
இன்று பார்த்தோமானால் ஆங்கில எழுத்துக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை அனைவரும் அதை பாவிக்க கூடிய மாதிரி இருக்கின்றது .
ஆகவே நமது நாட்டிற்குள்ளும் இதுபோன்று பேச்சுவார்த்தைகள் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை காண வேண்டும்.
இன்று மாவட்டத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அரச அதிகாரிகள் இது போன்ற நடமாடும் சேவைகளை நடத்துவதன் மூலம் சாதாரண மக்களின் பிரச்சினைகளும் குறைக்கப்படும்.
ஆகவே நாடு தற்போது உள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.