கொடிக்கம்ப விவகாரம்…புழல் சிறையில் அமர் பிரசாத் ரெட்டி!!அதிரும் தமிழக பாஜக!!
பனையூரில் அமைந்திருந்த பாஜகவின் கொடிக்கம்ப விவகாரம் தற்போது பெரும் சலசலப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகின்றது.
கொடி கம்பம் அகற்றம்
சென்னை பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் 50 அடி உயரம் கொண்ட பாஜகவின் கொடி கம்பம் அமைந்துள்ளது.
இந்த கொடிக்கம்பத்திற்கு எதிராக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலை துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த கொடி கம்பம் அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கொடிக்கம்பம் நேற்றைய முன்தின இரவு அகற்றப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்த நிலையில், ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அவ்வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
புழல் சிறையில் அமர் பிரசாத் ரெட்டி
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக பாஜகவை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கே சென்று கைது செய்த காவல் துறையினர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அதனை தொடர்ந்து, வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை அமர் பிரசாத் ரெட்டியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வர்ஷா உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் காவலில் வைக்கப்பட உள்ளார்.