அதி தீவிர புயலாக வலுவடையும் தேஜ் புயல்!
தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(அக்.21) தேஜ் புயலாக வலுப்பெற்று, தெற்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. தேஜ் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், தேஜ் புயலானது, ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே வரும் அக்.25 ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னத்திற்கு இந்தியா ‘தேஜ்’ என்ற பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புயலினால் முதலில் குஜராத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஓமன் நோக்கி நகருவதால் குஜராத்துக்கு பாதிப்பில்லை என்றும் குஜராத்தில் அடுத்த 7 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.