;
Athirady Tamil News

மோடியைச் சந்திப்பதற்கான தமிழர் தரப்பின் முடிவு : உத்தியோக பூர்வ வரைவு இறுதியானது

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தவதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோருவதற்கு இணக்கம் எட்டப்பட்ட நிலையில் அதற்கான உத்தியோக பூர்வமான கடிதத்தின் வரைவும் இறுதியாகியுள்ளது என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கட்சிகளின் தலைவர்களின் ஒப்பம்
அதேபோன்று, உயிர் அச்சுறுத்தல் மற்றும் உளவியல் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ரி.சரவணராஜா வெளியேறிய விவகாரம் உட்பட சமகாலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான தனித்தனியான கடிதங்களும் இறுதியாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பங்களை இடுவதற்கு கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் கூறியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த கடிதங்களில் கட்சித் தலைவர்கள் கையொப்பங்களை இட்டு அந்தப் பணி ஒரு சில நாட்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.