உக்ரைனியர்களை கதிகலங்க வைத்த ரஷ்யா! அறுவர் பலி : 16 பேர் காயம்
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள தபால் விநியோக மையத்தின் மீது நேற்று(22) ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
கார்கிவ் பிராந்தியஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்தத் தாக்குதல் தொடர்பில் தெரிவிக்கையில், “இது ஒரு பொது மக்களுக்கான இடம்,” கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் உக்ரைனிய தபால் சேவை ஊழியர்கள்.
இவ்வாறான தாக்குதல்களால், “ரஷ்யர்கள் கார்கிவின் அமைதியான மக்கள் மீது அதிக பயங்கரவாதத்தை திணித்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான இடம்
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இது தொடர்பில் வெளியிட்ட பதவில், “ரஷ்ய ஏவுகணைகள் தபால் விநியோக மையத்தைத் தாக்கின, இது ஒரு பொதுமக்களுக்கான இடம்”
“ரஷ்ய பயங்கரவாதத்திற்கு நாம் ஒவ்வொரு நாளும் முறையாகப் பதிலளிக்க வேண்டும். இந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாம் உலகளாவிய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்” – எனக் கூறியுள்ளார்.